பல்லவி
பாலய ஸ்ரீ ரகு4வீர
ஸு-க்ரு2பாலய ராஜ குமார மாம் (பா)
சரணம்
சரணம் 1
தாராதீ4ஸ1 வத3ன ராம
1தாராதீ3ஸ1 த3மன மாம் (பா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாலய/ ஸ்ரீ ரகு4வீர/
காப்பாய்/ ஸ்ரீ ரகுவீரா/
ஸு-க்ரு2பா/-ஆலய/ ராஜ குமார/ மாம்/ (பா)
நற்கருணையின்/ உறைவிடமே/ இளவரசே/ என்னை/ காப்பாய்...
சரணம்
சரணம் 1
தாரா/-அதி4-ஈஸ1/ வத3ன/ ராம/
தாரா/ அதிபன்/ வதனத்தோனே/ இராமா/
தாரா/-அதி3/-ஈஸ1/ த3மன/ மாம்/ (பா)
தாரை/ முதலானோர்/ மணாளனை/ வதைத்தோனே/ என்னை/ காப்பாய்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் சரணங்கள் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
1 - தாரா - தாரை - வாலியின் மனைவி.
2 - மகர - முதலை - கஜேந்திரனை முதலையின் பிடியிலிருந்து அரி விடுவித்தல் - இதனை சங்கு அரக்கனென்றும் கொள்ளலாம். 'பாஞ்சஜன' என்ற சங்கு அரக்கனை கண்ணன் வதைத்த கதை. பாகவத புராணம், 10-வது புத்தகம், 45-வது அத்தியாயம் மற்றும் விஷ்ணு புராணம், 5-வது புத்தகம், 21-வது அத்தியாயம் நோக்கவும்.
3 - மகராக்ஷ - மகராட்சன் - தண்டகாரண்யத்தில், இராமனால் கொல்லப்பட்ட 'கரன்' என்ற அரக்கனின் மகன் - இவன் இலங்கைப் போரில் இராமனால் கொல்லப்பட்டான்.
Top
4 - ஸ1ரதி4 மத3 ஹரண - இலங்கைக்கு செல்ல, கடலின் மீது வாராவதி அமைக்க எண்ணி, இராமன், கடலரசனை வேண்டினான். ஆனால், கடலரசன் கவனியாது இருந்ததனால், சினமுற்று, இராமன், கடலரசன் மீது, பிரமாத்திரத்தினை ஏவினான். உடனே, கடலரசன் புகலடைந்து, வாராவதி கட்ட உதவினான்.
5 - ஜய விஜய - ஜய, விஜயர்கள் - வைகுண்டத்தின் காவற்காரர்கள். இவர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு, தானவர்களாகப் பிறக்க நேர்ந்தது - இரண்யாட்சன் - இரணியகசிபு, இராவணன் - கும்பகர்ணன் மற்றும் கம்ஸன் - சிசுபாலன் என. அவர்கள் யாவரையும், விஷ்ணு சாபத்தினின்றும் விடுவிப்பதெற்கென்றே அவதரித்தார்.
7 - அக3 ராஜ த4ர - மலையரசன் - மந்தர மலை. பாற்கடலினின்று, அமிழ்து பெறவேண்டி, மந்தரமலையை மத்தாக்கி, தேவர்களும், தானவர்களும் கடைந்தனர். அப்போது, மந்தர மலை கடலில் மூழ்க, விஷ்ணு, ஆமையாக அவதரித்து, மந்தர மலையைச் சுமந்தார்.
Top
விளக்கம்
6 - ரவிஜ யம லாலித நாம - சுக்கிரீவன் மற்றும் யமன் இருவருமே சூரியனின் புதல்வர்கள். தியாகராஜர், தன்னுடை கீர்த்தனைகளில், 'ரவிஜ' என்ற சொல்லினை சுக்கிரீவனைக் குறிக்க பயன்படுத்துகின்றார். அதனால் இதனை 'சுக்கிரீவன்' மற்றும் 'நமன்' என்றோ அல்லது 'சூரியன்மகன் நமன்' என்றோ கொள்ளலாம்.
தாராதிபன் - மதி
Top